எழுதுவதைதைத் தவிர நெருங்கிய சொந்தம் என்று எனக்கு வேறு எதுவும் இல்லை. படிப்பதை எழுதுவதும்,எழுதுவதைப் படிப்பதும் தான் என் இதயம் கவர்ந்த பொழுதுபோக்கு, கந்தக பூமி, வறண்ட பூமி என்று பெயரெடுத்த விருதுநகர் மாவட்டத்திலுள்ள வி.முத்துலிங்கபுரம் என்ற கிராமம் தான் நான் பிறந்த வளர்ந்த ஊர் .என் அப்பா பெயர் கந்தசாமி, அம்மா பெயர் சரஸ்வதி, என் கற்பனை வளத்திற்கு என் கிராமத்தின் சுழல் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
"உலக வரைபடத்தில்
ஒவ்வொரு நாட்டின்
அடையாளமாய்
ஒரு புள்ளி வைக்கபட்டிருக்கும்
இந்த உலகத்திற்கே
அடையாளமாய்
வைக்கப்பட்டுள்ள
ஒரு அற்புதப் புள்ளி தான் காதல்"
ஒரு சாதாரண மனிதனை கவிஞனாய் இவ்வுலகத்திற்கு அறிமுகமபடுதிவைக்கும் பெருமை பெரும்பாலும் காதலுக்கு மட்டும்தான் உண்டு.
"காதலைப் பொருத்தவரை
உடல் என்பது புகைவண்டி
உள்ளம் என்பது தண்டவாளம்
வழக்கத்திற்கு மாறாய்
இந்த காதலில்
பயணம் செய்யும் போது மட்டும்தான்
புகைவண்டி
இருந்த இடத்திலேயே இருக்க
தண்டவாளம் மட்டும்
நகர்ந்து கொண்டே போகிறது
காதலை மாற்றி அமைக்கும் சக்தி
இந்த உலகுக்கில்லை
இந்த உலகத்தையே
மாற்றி அமைக்கும் சக்தி
காதலுக்குண்டு"
"பரபரப்பான இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரில் மனதிலும் பசுமை மாறாத சில நினைவுகள் இருக்கத்தான் செய்யும் அப்படிப்பட்ட சில நினைவுகள் இருக்கபோய்தான் இங்கு மனிதர்கள் மனிதர்களாக நடமாடிக் கொண்டிருகிறார்கள் நினைவுகளை முன்னோக்கி இழுத்துச் செல்லும் வலிமை காதலை தவிர வேறு எதற்குமே இல்லை"
"வரைமுறைகளுக்கு
"பரபரப்பான இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரில் மனதிலும் பசுமை மாறாத சில நினைவுகள் இருக்கத்தான் செய்யும் அப்படிப்பட்ட சில நினைவுகள் இருக்கபோய்தான் இங்கு மனிதர்கள் மனிதர்களாக நடமாடிக் கொண்டிருகிறார்கள் நினைவுகளை முன்னோக்கி இழுத்துச் செல்லும் வலிமை காதலை தவிர வேறு எதற்குமே இல்லை"
"வரைமுறைகளுக்கு
உட்பட்டதா காதல்...?
இல்லை இல்லை
வரைமுறைகளை
வகுத்ததே காதல்தான்...
காதலுக்குப்
படம் கற்பிக்க நினைக்கும்
மனிதர்களே...
காதல் கற்றுக்கொடுத்த
பாடத்தால்தான்
மனித ஜாதியே
சீரமைக்கப்பட்டதென்பதே
மறந்து விடாதீர்கள்...
நான் கட்டவிருக்கும் காதல் கவியாலயத்திற்கு எடுத்து வைக்கும் முதல் செங்கல் தான் இந்த ஒருகூடை காதல் என்ன விலை ....?
அன்புடன்
- வினோதன்