Friday, June 24, 2011

வானம்

வானம்
எங்கு போய்
முடியும் என்பதை
யாராலும்
சொல்ல முடியாது
அந்த வகையில்
எங்கள் காதலும்
வானம் போலதான்

Thursday, June 9, 2011

"தோடு"

நேற்றுவரை
துன்பத்தோடு
துயரத்தோடு வாழ்ந்து
இன்று உன்
செவிகளை அடைந்தவுடன்
உல்லாசத்தோடு
உற்சாகத்தோடு
வாழ்வதனால் தான்
இதனைத்
"தோடு" என்கிறார்களோ ...?

அள்ளி வருகிறேன் காதலை.....

அவளைப்
பார்க்கச் செல்லும் போது
வெறும் கையோடுதான்
நான் செல்கிறேன்
வரும் போதோ
அல்ல முடியாமல்
அள்ளி வருகிறேன்
காதலை.....

Popular Posts